search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனந்தகுமார் ஹெக்டே"

    அனந்தகுமார் ஹெக்டே மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். #HinduGirl #AnanthKumarHegde #RahulGandhi
    புதுடெல்லி:

    மத்திய திறன் மேம்பாட்டு இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்து பெண்ணை தொட்டவரின் கை, உடம்பில் இருக்கக்கூடாது” என்றார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கண்டனம் தெரிவித்தார். அதற்கு அனந்தகுமார் ஹெக்டே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் “தினேஷ் குண்டுராவ், ஒரு முஸ்லிம் பெண்மணியின் பின்னால் ஓடியவர் என்று மட்டுமே எனக்கு தெரியும்” என்று கூறி இருந்தார்.



    இந்நிலையில், ஹெக்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். “இந்த மனிதர் ஒவ்வொரு இந்தியரையும் தர்மசங்கடப்படுத்துகிறார். அவர் மத்திய மந்திரியாக இருக்க தகுதியற்றவர். எனவே, அவரை நீக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #HinduGirl #AnanthKumarHegde #RahulGandhi 
    இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #HinduGirl #AnanthKumarHegde
    பெங்களூரு:

    மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

    இந்த நிலையில் குடகு மாவட்டம் மாதாபுராவில் நேற்று இந்து அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், குடகில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக்கூடாது. அவர்கள் இங்கு வந்தால், மண்ணோடு மண்ணாக்குங்கள். இந்து பெண்களின் உடலை யாராவது தொட்டால், அவர்களின் கையை வெட்டுங்கள்.

    இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.

    அனந்தகுமார் ஹெக்டேயின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மதுசூதன் கூறுகையில், ‘அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு பேசியது தவறு. அவரது பேச்சுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. இதை பா.ஜனதா நியாயப்படுத்தாது’ என்றார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா எம்.பி. கூறுகையில், ‘அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்து தவறானது. அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார் என்பதை இது காட்டுகிறது. அவரை மந்திரிசபையில் இருந்து மோடி நீக்க வேண்டும்’ என்றார்.  #HinduGirl #AnanthKumarHegde 
    ×